திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வன் தொண்டர் அது கண்டு ‘என் மனம் கொண்ட மயில் இயலின்
இன் தொண்டைச் செங் கனி வாய் இளம் கொடி தான் யார்? என்ன,
அன்று அங்கு முன் நின்றார் ‘அவர் நங்கை பரவையார்
சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார்’ எனச் செப்ப.

பொருள்

குரலிசை
காணொளி