திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார்,
வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்
ஏறி, மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால்
மாறு இல் மலர்ச் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து.