திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப் பணி சென்னி மேல் கொண்டு,
சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும் தொறும் புறவிடை கொண்டு,
மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம் கொண்டு வணங்கினர் போந்து,
நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து.