திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கும் அவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச்
செங் கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூர் ஆளி,
‘இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார்?’ என்னக்
கங்கை சடைக் கரந்த பிரான் ‘அறிந்திலையோ?’ எனக் கரந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி