பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூமலர்ப் பிணையல், மாலை, துணர் இணர்க் கண்ணிக் கோதை தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி, மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் நாம நீள் கலன்கள் சாத்தி நன் மணக் கோலம் கொண்டார்.