திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று
நாதன் ஆம் மறையோன் சொல்லும் ‘நாவலூர் ஆரூரன் தான்
காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி,
மூது அறிவீர்! முன் போந்தான்; இது என்றன் முறைப்பாடு’ என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி