திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொரு வரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் ‘என்னை
ஒருவரும் அறியீர் ஆகில் போதும்’ என்று உரைத்துச் சூழ்ந்து
பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்
திரு அருள் துறையே புக்கார், கண்டிலர்; திகைத்து நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி