திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
காமத் துயரில் கவல்வார் நெஞ்சில் கரையில் இருளும் கங்குல் கழி போம்
யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடிச்
சேமத் துணையாம் அவர் பேர் அருளைத் தொழுதே திரு நாவலர் கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை தகு நீர்மை யினால் நிகழச் செய்தார்.