திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ, ‘மங்கை பரவை தன்னைத் தந்தோம்;
இன் அவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம்’ என்று அருளிப்
பொன்னின் புரி புன் சடையன்; விடையன்; பொருமா கரியின் உரிவை புனைவான்,
அன்னம் நடையாள் பரவைக்கு ‘அணியது ஆரூரன் பால் மணம்’ என்று அருளது.