பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சோதி மணி வேதிகைகள் தூநறும் சாந்து அணி நீவிக் கோது இல் பொரி பொன் சுண்ணம், குளிர் தரள மணி பரப்பித் தாது அவிழ் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களும் சமைத்து வீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத் தெளித்தார்.