திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி
ஈர இளம் தளிர்க் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்,
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று அதன் மீது சமிதை என்ன,
மாரனும் தன் பெரும் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான், வந்து.