திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘கந்தம் கமழ் மென் குழலீர்! இது என்? கலை வாள் மதியம் கனல்வான் எனை; இச்
சந்தின் தழலைப் பனி நீர் அளவித் தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும் ஆல்,
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய