திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அங் கண் மாமறை முழங்கும் மருங்கே, ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும்;
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும்; வாச மாலைகளில் வண்டு முழங்கும்;
பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்;
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும்