திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி,
முகில் நுழை மதியம் போலக் கை வலான் முன் கை சூழ்ந்த
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங் கை
உகிர் நுதி முறையில் போக்கி, ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான்.

பொருள்

குரலிசை
காணொளி