பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தணர் அவையில் மிக்கார் ‘மறையவர் அடிமை ஆதல் இந்த மா நிலத்தில் இல்லை; என் சொன்னாய்? ஐயா! என்றார்; ‘வந்தவாறு இசைவே அன்றோ? வழக்கு இவன் கிழித்த ஓலை தந்தை தன் தந்தை நேர்ந்தது’ என்றனன் தனியாய் நின்றான்.