திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச்
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன்; தொன்மை நோக்கித்
தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்.

பொருள்

குரலிசை
காணொளி