திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தெள் நிலா மலர்ந்த வேணியாய்! உன் தன் திரு நடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம்’ என்று்
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவுஅரும் பதிகம் பாடினார், பரவினார், பணிந்தார்.