பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நிறை குடம், தூபம், தீபம், நெருங்கு பாலிகைகள் ஏந்தி நறை மலர், அறுகு, சுண்ணம், நறும் பொரி பலவும் வீசி உறை மலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்.