திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மை யே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய்,
ஆற்ற அண்டம் எலாம் பரந்து, அண்ணல் வெண்
நீற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா.

பொருள்

குரலிசை
காணொளி