திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு அரும் காரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக.
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெரும் கூத்தின்
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி