பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர் ஒதுங்கத் திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர் காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி நாவல் ஊரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப் பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார்