திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
ஆய் இடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து
மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெம் சமாக் கூடலும் பணிந்து
சே இடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசைக் கற்குடிமலையில்.