திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்திக்
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைதலை மேல்கொண்டு நின்று
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே! என்ற வன் தொண்டர்க்கு ஊன்று கோல் அருளி
இணங்கு இலா மொழியால் உள்ளோம் போகீர் என்று இயம்பி