திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்த
திரு அருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவர் உள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்.

பொருள்

குரலிசை
காணொளி