திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றால்
அடுத்து ஆற்றும் நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும்
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி.