திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பினால் வரும்
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்
ஓட்டு அறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்

பொருள்

குரலிசை
காணொளி