திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈறு இலாப் புகழின் ஓங்கும் ஏயர் கோனார் தாம் எண்ணப்
பேறு இது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவார் ஆகி
வேறு இனி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து.

பொருள்

குரலிசை
காணொளி