திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
பரவி அப் பதிகத் திருக் கடைக் காப்புச் சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக்
கரவு இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து ருளி
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக்
குரவு அலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில்