பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி ஓங்கு கன்னி மாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார் தாங்கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதே ஏங்கு சுற்றத் தொடும் இறைஞ்சிப் போனார் எயில் சூழ் தம்பதியில்.