திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டுஅவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார்.
வண்டு அலர் கொன்றை யாரை வடி உடை மழு என்று ஏத்தி
அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலை யாற்றூர் புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி