திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த
திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின்
அங்குரம் போல் வளர்ந்து அருளி, அரு மறையோடு உலகு உய்ய
எங்கள் பிரான் ஈராண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும்.

பொருள்

குரலிசை
காணொளி