திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில் நீல நக்கர் தாமும் சைவ
மறையவனார் எழுந்து அருளும் படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும்
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி
முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்,