பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள் ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலைப் பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்னப் பார்மேல் ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே.