திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம் புகலூர் மன்னு புண்ணியரை
நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர்க் கண்ணீர் அருவி செய்ய,
மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து,
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார்