திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மறை வளர் திருவே! வைதிக நிலையே! வளர் ஞானப்
பொறை அணி முகிலே! புகலியர் புகலே! பொருபொன்னித்
துறை பெறு மணியே! சுருதியின் ஒளியே! வெளியே வந்து
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி