திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அப்பொழுது திருநீலகண்ட இசைப் பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து எழுந்து நோக்கி,
இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச்
செப்பியது இக் கருவியை நான் தொடுதலின் அன்றோ என்று தெளிந்து செய்வார்.