திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்து அருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திரு அருள் உடையேம்
நன்றி இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திரு நீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் எ