திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மாலை இடை யாமத்துப் பள்ளி கொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து
ஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்தனையோ பாடுதற்கு என்
ருளிச் செய்ய
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி