திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்து உற வணங்கிப்
பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே
தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி அத் தனி முதல் தொண்டர் தாமே
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில்