திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும்
திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி
மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில்
ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த
உலகு இறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லை மறை விதிச் சடங்கு மறை