பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் அளவில் ஆளுடைய பிள்ளையார் எழுந்து அருளி அணுக எய்தச் செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் திருஞான சம்பந்தன் வந்தான் என்றே எவ் உலகும் துயர் நீங்கப் பணி மாறும் தனிக் காளத்து எழுந்த ஓசை வெவ் உயிர்க்கும் அவன் கேளா மெல் லியலை விட்டு எதிரே விரைந்து செல்வான்.