பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் நீல மாமணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும் பால வாயின பவள வேதிகை மலர்ப் பந்தர்.