திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மங்கலத் தூரியம் துவைப்பார் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப்
பொங்கு மணி விளக்கு எடுத்துப் பூரண கும்பமும் நிரைப்பார் போற்றிச் செய்வார்
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை.