திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வக்கரைப் பெருமான் தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருளாலே
செக்கர் வேணியார் இடும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு
தொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர் கொளத் தொழுது எழுந்து அணை உற்றார்.