திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து
விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து விரைந்து சென்று அவர் தமை அணைந்து
கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை தொழுது அவரும் முன் நிற்ப
வரம்மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்.