திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்புய மலராள் போல்வார் ‘ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டும்’ என்று கொற்றவன் தனக்கும் கூறித்
தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி