திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றிச்