திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கிளைஞரும் மற்று அது கேட்டுக் ‘கெழுவு திருப் பதிகத்தில் கிளர்ந்த ஓசை
அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம்
வளர இசை நிகழ்வது’ என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார்.