திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வினவி எடுத்த திருப் பதிகம் மேவு திருக்கடைக் காப்புத் தன்னில்
அனைய நினைவு அரியோன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார்
துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்.