திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும்
தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து
நீடு உயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு
மாடு சூழ் வலம் கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி